பக்கம்:குப்பைமேடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

143

'தாய் தான் வளர்க்கும் உரிமை பெறுகிறாள்' என் றார் வழக்கு உரைஞர்.

'அவள் வராவிட்டாலும் குழந்தையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது' என்று பிடிவாதம் காட்டினார் மாமியார்.

நாம் ஏன் இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டோம் என்று வேதனையாக இருந்தது.

'நான் வருகிறேன்' என்றேன்

'உட்காருங்கள் உங்களை வைத்துப் பேசுவதுதான் நல்லது; நீங்கள் அங்குப் போய்ச் சொல்ல வேண்டும், சட்டம் இருக்கட்டும். நீங்கள் நியாயம் சொலலி எங்கள் வீட்டிக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் அந்த அம்மையார்.

எனக்கே பரிதாபமாக இருந்தது இவ்வளவு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டும் இவள் புத்தி ஏன் இப் படிப் போகிறது என்று வருத்தப்பட்டேன்.

" அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்ளாதது ஒரு தப்பா; குடும்ப மானம் அவளைத் தவறாக நினைக் கத் தூண்டி இருக்கிறது. அந்த அச்சகம் ஆறுமுகத்துக்கு புத்தி இருக்க வேண்டாமா, மகளுக்கு எடுத்துச் சொல்லி அனுப்புவது முதல் கடமை என்று பட்டது. போனதும் அதைப் பேசுவது என்று முடிவு செய்து கொண்டேன்.

இராமனுஜம் தெரு எனக்கு விடை தந்தது. என் நண்பர் ஆறுமுகம் புத்திசாலி, திறமைசாலி, தம் மகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/145&oldid=1115593" இலிருந்து மீள்விக்கப்பட்டது