பக்கம்:குப்பைமேடு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

145

சொல்லி விட்டார். நீ வந்தால் உயிரோடு பார்க்கமுடியும் நேரம் கடந்து வந்தால் அவள் காலம் கடந்து விடுவாள் நலம் நலம் என்றா எழுத முடியும். உள்ளகை உள்ளபடி தானே எழுத முடியும். இல்லாததை எழுத இது என்ன சரித்திர நாவலா? யதார்த்தத்தை எழுதினால் படிக்க வேண்டியது தானே! அதற்குப் பதார்த்தம் பார்த்துக் கொண்டா இருப்பார்கள். பேச்சுச் சுதந்திரம், இங்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. அது அவர்கள் அறியாமல் செய்த தவறுகள், அவற்றை நாமும் பெரிது படுத்தத் தேவையில்லை. வசதி மிக்க வாழ்வு அவளுக்கு எங்கே கிடைக்க போகிறது? அறியாமையால் அவள் செய்யும் தவறு கணவன் கூப்பிட்டால் வர வேண்டியது தானே? அவள் அப்பாவின் எதிர்ப்பார்ப்பும் அதுவாகத்தானே இருக்க முடியும். அவள் புருஷன் வீட்டில் வாழ்கிறாள் என்றால் பெற்றவருக்குச் சந்தோஷம்; பெரிய பணக்கார வீட்டு மருமகள் என்று சொல்லும்போது அதைக் கேட்கும் போது நெஞ்சு குளிர வேண்டாமா? அங்கு என்ன கொட்டியா வைத்திருக்கிறது?

இந்த நினைவுகள் என் நினைவை நிரப்பிக்கொண் டிருந்தன.

ஏன் இராமானுஜம் தெருவுக்குப் போனோம்? தேவை இல்லாமல் அந்த வீட்டில் கால் எடுத்து வைத்தது தவறு தான் என்றாலும் மனசுகேட்கவில்லை; நம்மஊர்ப் பெண் வாழ்க்கைப்பட்ட இடம். அந்தப் பக்கம் போனீர்களே அங்கு ஏன் பார்த்துவிட்டு வரக்கூடாதா' என்று ஆறுமுகம் கேட்டால் என்ன செய்வது.

அந்த நேரத்தில் தமிழ்ச் சரித்திர நாவல்கள் படித்துப் பொழுது நோக்கி இருக்கலாம். பிரச்சனைகளை மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/147&oldid=1115598" இலிருந்து மீள்விக்கப்பட்டது