பக்கம்:குப்பைமேடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

147

ஒரு பணக்காரர் காரில் நான் ஏற வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. என் சுயமதிப்பு அதை மறுக்கச் செய்தது. தேவையில்லாமல் பணக்காரர் மீது எனக்கு ஒரு வெறுப்பு. மறுத்து விட்டேன். அதற்குப் பிறகு நான் பஸ் நெருக்கடியில் பர்சைப் பறி கொடுத்துவிட்டேன். பேசாமல் அவர் அழைப்பை ஏற்று அதைப் பயன்படுத்தி இருக்கலாம். தேவையில்லாமல் பணக்காரனை வெறுப்பது இந்தத் தமிழ்ப் படங்களில் பார்த்து வந்துவிட்ட பழக்கம், அதுமட்டுமல்ல, நடைமுறையும் அப்படி ஆகிவிட்டது.

காய்கறி விற்பவர் கூட, வைரக் கம்மல் போட்டுக் கொண்டு பட்டுப் புடவை உடுத்திக் கொண்டு வியாபாரம் செய்ய வந்தால் விலை கூடச் சொல்கிறார். 'உங்களுக்கு என்ன நீங்கள் கொடுக்கலாம்' என்று உதாசீனமாகத் தான் பேசுகிறார்கள். இன்று பணக்காரன் என்று சொல் லிக் கொள்வதற்குப் பயப்பட வேண்டி இருக்கிறது. அந்தப் பணக்கார வெறுப்பு இந்தப் பெண்ணுக்கும் வந்து விட் டது. ஏழைகளாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்து பழகி விட்ட ஒருத்தருக்குப் பணக்காரர்களைக் கண்டால் வெறுப்பு ஏற்படுவது இயற்கைதான்; பொறாமையும் ஏற் படுகிறது. சமுதாய வட்டம் இந்த அமைப்புகளுக்கு வழி வகுத்த பிறகு அவர்களை வெறுத்து என்ன பயன்? ஏழ்மை வீட்டில் பழகி அதிலே ஒரு சோர்வைக் கண்ட இந்தப் பேதைப் பெண் இந்தப் பணக்காரச் சூழலை வெறுக் கிறாளா? சற்றும் புலப்படவில்லை.

என்னமோ என்னைப் பொறுத்தவரை அவள் மாம னார் நல்லவராகத்தான் தென்படுகிறார். இப்பொழுது கோயில் முதலிய பொது நிறுவனத்துக்கும் நன்கொடை தருகிறார்களே அவர்கள் எல்லாம் ஏழைகளா? பணக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/149&oldid=1115600" இலிருந்து மீள்விக்கப்பட்டது