பக்கம்:குப்பைமேடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

13

உண்டு. அவர்களைப் பாதுகாக்க ஒரு மகன் உண்டு. கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்த்துகொள்ள நரைத்த மயிர் முடி உடைய மனைவி உண்டு. எந்தவித மான மாற்றமும் காண முடியாத வரையறை செய்யப் பட்ட வாழ்க்கை.

திடீர் என்று இவர் பிரதமர் ஆகி விடுகிறார். என்ன சுருசுருப்பு: நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விடுகிறார். திடீர் கற்பனை. என் கற்பனை அவரைச் சுமக்க முடியா மல் அவரைத் தொபீல் என்று கீழே போட்டுவிடுகிறது. இவர் எப்படிப் பிரதமர் ஆகமுடியும், குப்பைத் தொட்டி: பழமையின் குவியல்கள்; அவ்வளவுதான்.

அவர் யாரோடாவது சண்டை போடுவாரா? சண்டை போட்டால் என்ன வார்த்தை பேசுவார். கைச் சண்டை அல்ல; யாரிடமாவது சில்லரைச் சண்டைகள் போடுவாரா என்று ஆவலாய்ப் பார்ப்பேன். ஏமாற்றம் தான். காய்கறிக் கடைக்காரன் கூடத் தகராறு செய்யாமல் போகிறான். எனச்கு ஒரே எரிச்சல். என் அதிர்ஷ்டம் விஷயம் கிடைத்தது. கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிக் காரன் ஒரு சிமெண்ட் குப்பைத் தொட்டியை அவர் வீட்டு வாசற்படி பக்கத்தில் போட்டான். அது ஒரு புதிய வரவு. என் வீட்டுக் குப்பையை அதில் என் வீட்டு வேலைக்காரி கொண்டு போய்க் கொட்டினாள். பக்கத்து வீட்டாரும் அதைப் பயன் படுத்தினார்கள். அது ஒரு சமூகப் பணிச் சொத்து. வாழ்க நீ எம்மான் என்று அதனை வாழ்த்தி னேன்.

அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு கிறிஸ்துவர். அது அவருக்கு ஒதுங்கி வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/15&oldid=1112516" இலிருந்து மீள்விக்கப்பட்டது