பக்கம்:குப்பைமேடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

ராசீ

ரர்தானே திருப்பதி உண்டியலில் பிறர் அறியாது பல லட் சங்கள் மொத்தமாகக் கொட்டிவிட்டு வருகிறார்கள்; வசதி படைத்தவர்கள் நன்மைகள் செய்ய முடியும்; அவர் களை விரோதிப்பதால் பயன் இல்லை என்று என்னையும் அறியாமல் அவர்கள் புகழ்ச்சியை நினைக்க வைத்தது.

நண்பர் ஆறுமுகம் வரும்போதுஎல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனையோடுதான் வருவார், இப்பொழுதைய பிரச்சனை பானு தான்; அவள் வாழா வெட்டியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

'நான் இவளைப் போகச் சொல்கிறேன்" மறுக்கி றாள்; கழுத்தை பிடித்தா அவளைத் தள்ள முடியும்? என்று கேட்பார்.

' என்னதான் சொல்கிறாள்'

'மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம் என்பதைக் கேட்டதில்லையா? உங்களை மதிக்காதவர் வீட்டிற்கு நான் போகமாட்டேன்' என்கிறாள்.

'நீங்கள் அங்கும் போகாமல் இருந்து விடலாமே".

'பெண் என்று இருந்தால் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்; சென்னைக்குப் போய்விட்டு மகளைப் பார்க் காமல் வருவது எப்படி நியாயம்? பெண்ணை வாழத்தான் அனுப்பினேனே தவிரச் சிறைக்கா அனுப்பி இருக்கிறேன், சிறைக்குச் சென்றாலும் மாதம் ஒருமுறை பார்க்க அனு மதி உண்டு; பார்க்க முடியும். இது என்ன மலைக் கோட் டையா? அவர்கள் எப்படியும் பேசுவார்கள்! பெண்ணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/150&oldid=1115601" இலிருந்து மீள்விக்கப்பட்டது