பக்கம்:குப்பைமேடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

153

முடிந்தது. தீரவிசாரிக்க வந்த போது நான் தெளிவுபடுத் திவிட்டேன். நான் செய்தி தந்த தேதி ஏப்ரல் முதல் தேதி என்றேன் அவர்களும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்கள். நானும் சிரித்து விளையாடினேன்’’. அவர்கள் யாரும் என்மீது மான நஷ்ட வழக்கு எதுவும் போடவில்லை'.

இது பயங்கரமான விளையாட்டாக இருக்கிறதே"

'வாழ்க்கையில் ஏதாவது விளையாட்டும், நகைச் சுவையும் தேவைப்படுகின்றது. சின்ன வயதில் இருந்து இந்தப் பழக்கம் வந்து விட்டது. எதிலும் ஏதாவது சுவை கண்டு மகிழ்வது வழக்கம் ஆகிவிட்டது.

மற்றவர்களைச் சிரிக்க வைக்க, ஏமாற்றி வியப்பு ஊட்ட ஒரு நாளை மதிக்கிறோம், சின்ன வயதில் உருளைக்கிழங்கில் ஏ.எப். என்று எழுதிப் போவோர் வரு வோர் மீது துணிந்து கறைப்படுத்தி இருக்கிறேன். அந்த விளையாட்டுகள் எல்லாம் மறைந்து விட்டன. இப் பொழுது யாரும் அதைப் போல் செய்வதில்லை.

பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் போகிப்பண்டி கை; நாங்கள் சிறு பறைகொட்டி மகிழ்வோம்; வீடுகளின் முன்னால் நெருப்பு எழும்பும்; அதில் குளிர்காய ஒருங்கு கூடுவோம்; டம் டம், என்று அடித்து மகிழ்வோம். உடைந்த கதவுகளைப் பிடுங்கி ஏரியில் இடுவோம் ; துணிந்து தவறுகள் செய்வோம். மறுநாள் பொங்கல் நாள்

கரும்புகள் சந்தைக்கு விற்க வரும்; அவற்றை மொத்த மாகக் கும்பலாகச் சென்று இழுத்துத் திருடுவோம்; அது

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/155&oldid=1115607" இலிருந்து மீள்விக்கப்பட்டது