பக்கம்:குப்பைமேடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

ராசீ

எல்லாம் திருட்டில் சேராது. சாதிப்பது ஒன்றும் இருக் காது. ஆனால் இது மாதிரி தவறுகள் செய்யும்போது அதில் ஒரு சந்தோஷம். திருடுவது தவறுதான். ஆனால் இதெல்லாம் திருட்டு ஆகாது என்று பழகிவிட்ட எனக்கு இந்த வேடிக்கை; இந்த விளையாட்டுப் புதிது அல்ல; என்னை விட்டுப் போகவில்லை.

~5

"நான் என்ன செய்வது? என் வீடுதானா கிடைத்தது? 'சூட்கேசு ஒன்று என் வீட்டின் முன் கிடந்தது. யாரோ போட்டு விட்டுச் சென்று விட்டனர். யாரோ நான் பெரிய அதிகாரி என்று தவறாக நினைத்து 'பாம்' வைத்து விட்டார்கள் பயந்து அதை எடுக்கப் போனேன்.

'எடுக்காதீர் அதில் வெடி இருக்கிறது; போலீசுக்குத் தெரிவியுங்கள்' என்றார்கள்.

நான் போலீசுக்குத் தகவல் தெரிவித்தேன்.

அவர்கள் அதைத் தொடப்பயப்பட்டார்கள். அவர் கள் உள்ளே வெடி மருந்து இருக்கும் என்று முழுக்க முழுக்க நம்பி விட்டார்கள். உடனே அவர்கள் வெடி மருந்து விற்பன்னரை வரவழைத்து அதனைச் சோதனை போட ச் செய்தார்கள்.

எங்களுக்குத் 'திக்கு 'திக்கு' என்று அடித்துக் கொண் டது. எங்கே அது வெடிக்கிறதோ என்று பயந்தேன்; இருப்பது ஒரு வீடு; அது இடிந்து விழுந்தால் நாம் என்ன செய்வது? குடிசை வீடாக இருந்தால் அரசாங்கம் புது வீடு கட்ட நிதி தருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/156&oldid=1115608" இலிருந்து மீள்விக்கப்பட்டது