பக்கம்:குப்பைமேடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ராசீ

சமுதாயச் சலுகையைத் தந்தது. யாரிடமும் கவகலப்பாகப் பழக மாட்டார்.

அவர் குப்பை லாரிக்காரரைப் பார்த்துக் கூப்பிட்டார்.

"என் வீடுதான் உங்களுக்குக் கிடைத்ததா என்று கோபமாகக் கேட்டார் .

“உங்கள் மதில்சுவர் அகலமாக இருக்கிறது. நிறைய இடம் இருக்கிறது. மற்றும் உங்கள் வீட்டுக் குப்பையை எளிதில் நீங்கள் போட்டுக் கொள்ளலாம். உங்களுக்குச் செய்து கொடுத்த சலுகை. இனி நீங்கள் நாலு வீடு கடக்கத் தேவையில்லை. மதிலுக்கு உள்ளிருந்தே கொட் டலாம் என்று விளக்கம் தந்தான்.

மரியாதையாக அதை வேறு எங்காவது போட்டுத் தொலையுங்கள். இதை முதலில் அப்புறப்படுத்துங்கள் என்று கத்தினார்.

அவரிடம் ஒரு கடப்பாறை இருந்தால் அதை ஒரு ' அக்பர் மசூதி' ஆக்கி இருப்பார். கையில் ரூபாய் நோட்டு 'பத்து' லைத்து இருந்தார், அதை நீட்டி "இதைப் பெற்றுக்கொள் இதை மாற்றி விடு என்றார். அதை அவர் ஈட்டி என்று நினைத்தார். அது பாதிதூரம் கூட...ப் பாயவில்லை .

" அதற்கு வேறு ஆளைப் பாரும். குப்பை எடுக்கும் தொழிலாளிதான் என்றாலும் இந்தச் சப்பைக்கட்டு என் னிடம் பலிக்காது. அதை இந்தக் குப்பைத் தொட்டியில் போடுங்க என்று கர்ஜித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/16&oldid=1112716" இலிருந்து மீள்விக்கப்பட்டது