பக்கம்:குப்பைமேடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

ராசீ

காரணம் ஆகாது; அதை அவள் பொருட்படுத்தவில்லை. அவனை அவள் வெறுத்துப் பேசியதே இல்லை' என்று பேசினார்.

எனக்கு இன்னும் சிக்கலாகிவிட்டது. நோய் தெரி யாமல் அதற்கு மருந்து எப்படிக் காண முடியும் என்று வேதனை ஏற்பட்டது. காரணம் தெரியாமல் களத்தில் இறங்கியது வீண் என்று பட்டது.

என்னைப் பொறுத்த வரையில் அவர்களைச் சேர்த்து வைப்பது என்று தீர்மானித்து விட்டேன். குறைகள் இல்லாமல் இருக்காது; எந்த இடத்திலும் ஏதாவது குறை இருக்கத்தான் செய்யும். அதற்காக வாழ்வை இழப்பதா?

அப்படி அவர்கள் என்ன தவறு செய்துவிட்டார்கள்? பானுவைச் சந்தித்துக் கேட்டுவிட வேண்டும் என்று துடித்தேன். அதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கட் டும் என்று காத்திருந்தேன். -.

அஞ்சல்வழிக்கல்வி தபால் ஒன்று தவறி என் வீட்டில் விழுந்து விட்டது.

'உதயபானு' என்றால் யாருக்கும் தெரியாது.

'அஞ்சலை” என்றால் தான் அவளைத் தெரியும் , அந்தப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார்கள்.

'அஞ்சலி என்ற தமிழ்ப்படம் இப்பொழுது வந்தது. இது அவளுக்கு ஏற்கனவே அமைந்து விட்ட பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/162&oldid=1115617" இலிருந்து மீள்விக்கப்பட்டது