பக்கம்:குப்பைமேடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

165

தான் கருப்பு மையில் எழுதிய காகிதங்களை அச்சு மையில் காண வேண்டும் என்னும் ஒரே ஆசைதான் கார ணம்.

இந்த எழுத்தாளர்கள் பைத்தியக்காரர்கள். தாம் நினைப்பதை எழுதிக் கொட்டி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கவிதைப் பைத்தியங்கள் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. பூக்களின் பெயர் களை வைத்துப் பாக்களை எழுதுவார்கள். அதை அவர் கள் மட்டும்தான் ரசிக்க முடியும். பக்திப் பரவசத்தால் பக்கம் பக்கமாக எழுதித் தாம் ஒரு முக்கியஸ்தராகக் காட்டிக் கொள்கிறார்கள் சிலர். ஒரே குறளுக்கு முந்நூறு பக்கம் விரிவுரை எழுதிக் கொண்டு வந்து தரு வார்கள் சிலர்.

இதை யார் படிக்கிறார்கள் என்று கேட்டுப் பார்த் தால் கடின உழைப்பு' என்று உழைப்பின் உயர்வு குறித்து உபதேசம் செய்வார்கள்.

செத்துவிட்ட மனைவியின் எழுத்துக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அழித்து விட்ட கருத்துக்களை அச்சிட்டு நினைவுச் சின்னம் எழுப்பும் ஷாஜஹான்களும் இருக் கிறார்கள். நூல்கள் நினைவுச் சின்னங்களாகின்றன.

ஒரு சிலர் காலம் கடந்த நூல்களை விமரிசித்துக் கொண்டு தம் காலத்தைக் கழிப்பார்கள். இவை எல்லாம் எங்கள் அச்சகத்தைக் காப்பாற்றி வருகின்றன.

இவர்களில் பலர் ஆர்வம் காரணமாக நூலை அச்சிடு வார்கள். அதற்கு உரிய அச்சுக் கூலி கொடுப்பதற்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/167&oldid=1115623" இலிருந்து மீள்விக்கப்பட்டது