பக்கம்:குப்பைமேடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

ராசீ

அஞ்சலை என்ற பெயர் மறந்து உதயபானு' என்ற பெயர் தான் பரவியது. நேரில் அவர்கள் என்னை அணுகு வதை விட்டு விட்டனர். எனக்கும் இதில் ஈடுபட நேர மில்லாமல் போய் விட்டது.

"பேப்பர் படிக்கவே நேரம் இருப்பதில்லை' என்று சொல்லிக் கொள்ளும் பெருமைகள் என்னைச் சூழ்ந்து விட்டன. அப்படியும் ஒரு சிலர் பெருமைப் படுத்திக் கொண்டு ஞானசூனியர்களாக வாழ்வதை நான் பார்த் திருக்கிறேன்.

நீதிமன்றம் அவசரப்பட்டு அநீதியான தீர்ப்பு வழங்க வில்லை. வக்கீல்கள் அவர்கள் வாதங்களைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அந்தப் பெண்ணை வாழ வைக்க வேண்டும் என்று அக்கரை எழவில்லை. விவாகரத்து வாங்கிக் கொடுத்தால் தான் அவர்களுக்கு காசு இல்லாவிட்டால் அவர்கள் தொழிலுக்கு மாசு. அதை எடுத்து நடத்தியவர் பெயர் சின்னராசு.

முடிவைப்பற்றி அவளும் கவலைப்படவில்லை. விடைத் தாள் எழுதும் தேர்வு முடிவுகளில் மட்டும் அக்கரை காட்டி வந்தாள். பல்கலைக்கழகம் எழுதும் பாடங்கள் அவளுக்கு உரிய காலங்களில் தவறாமல் வந்து கொண் டிருந்தன.

ராமனுசம் தெருவில் இருந்து கடிதங்கள் வரும் என்று அவள் பெற்றோர்கள் எதிர்பார்த்தார்கள்; ராமானுசம் நிறுவனத்திடமிருந்து பாடங்கள் வந்து கொண்டிருந்த தால் கணக்கில் இவள் மேதை என்று காட்டிக் கொள்ள இந்தக் கடிதங்கள் பயன்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/170&oldid=1115628" இலிருந்து மீள்விக்கப்பட்டது