பக்கம்:குப்பைமேடு.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172
ராசீ
 

தெரிந்தால் சொல்லி வைத்தால் அஞ்சோ, பத்தோ மார்க் குகள் சேர்த்து மேலே இழுத்து வந்தார்கள் அதுகூட இவ னுக்குத் தேவையில்லை. ‘மெரிட்’ இருந்தது. அதனால் இவனுக்கு இடம் கிடைத்தது.

‘டேய், இப்ப எல்லாம் எப்படி அட்மிஷன்?’ என்று கேட்டான்.

அவனுக்கு இப்பொழுது இங்கு இருக்கிற நிலவரம் அதிகம் தெரியாது. தெரிந்தாலும் தெளிவாகத் தெரியாது. 'ஒன்று வசதி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறப்பு முத்திரை இருக்க வேண்டும் இவர்களுக்குத்தான் இடம்". என்றேன்.

“Donation is our nation” என்றான்.

"அதுதான் இன்றைக்கு நடைமுறை. எல். கே. ஜி. சேர்க்கும்பொழுதே ஆரம்பமாகிறது. அதற்கு என்று சம்பாதிக்கணும்; பட்ஜெட்டில் ஒதுக்கி வைக்கணும்.'

“புரியலையே”

"பையனைப் படிக்க வைக்கிறோம். அவன் பெரியவ னாகிறான். தொழில் கல்வியில் சேர்க்கணும். அதுக்குச் சில லட்சங்கள் எடுத்து வைக்கணும்’ என்றேன்.

“வரதட்சணை கொடுமையை விடக் கடுமையாய் இருக்குதே.”

“இதுக்கும் அதுக்கும் அதிக வித்தியாசமில்லை.”