பக்கம்:குப்பைமேடு.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அதிர்ச்சி
173
 

பெண்ணை மாப்பிள்ளை வீட்டிலே சேர்க்கக் கொடுக் கிறது வரதட்சணை. இங்கே கல்வி நிலையத்தில் சேர்க் கிறதுக்குத் தருவது டொனேஷன் பெயரில்தான் வித்தி யாசம் என்றேன்.

அவன் தன்னைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டான்

"என்னடா ஏதாவது கொண்டு வந்தியா?"

"கொண்டு வந்தேன். என் அக்கா மகளுக்குக் கலி யாணம். அவளுக்குக் கொஞ்சம் செலவு செய்தேன். மனை ஒன்று வாங்கினேன். கட்டிக்கிட்டு இருக்கேன்; முடியலை"

"இவ்வளவுதானா முடிந்தது?"

"அதற்கு மேலே எவனும் வாரிக் கொடுக்கறது இல்லை. அமெரிக்காவா? நிறையக் கொண்டு வருவதற்கு? அங்கே கூட இனிமேல் தலைஎடுக்க முடியாது. ஏகப்பட்ட வரி ஏத்திட்டாங்க."

"நீ ஏண்டா அமெரிக்கா போகலே?"

"விசா எப்படிக் கிடைக்கும்? அந்தஊர்ப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா போயிருக்க முடியும்".

"அதுக்குன்னு சில பெண்கள் இருக்கிறார்களாமே?”

"அதுவா? விசா வாங்க அவள் உதவுவாள், அவளைக் கல்யாணம் பண்ணிஇட்டுப் போய் விடலாம். அதற்கப் புறம் அவள் விவாகரத்து செய்து கொள்வாள். அதற்கு அவளுக்கு "பீசு தரணும்",