பக்கம்:குப்பைமேடு.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
174
ராசீ
 

"ஆச்சரியமாக இருக்கே? இப்படியும்ஒரு தொழிலா?

நல்லதுதானே. அவளைக் கட்டிக்கிட்டு நாம் என்ன செய்யமுடியும்?' என்று அவன் அபிப்பிராயம் தெரிவித் தான்.

“அது போகட்டும். உங்க மைத்துனரைப் பற்றி என்னமோ சொல்ல வந்தியே? என்ன அது?“

“ இந்தக் காலத்திலே எவனாவது மேல் வரும்படி இல்லாம வாழ முடியுமா? வந்த இடத்திலே கைகட்டி கிட்டு இருக்கமுடியுமா?’’

“அப்படி இருந்தால் அது அபூர்வ ராகம் தான் ."

“அதைத்தான் காந்தியின் சீடர் என்று சொன்னேன்".

"எப்படி உனக்கு வரும்படி?’’

'ஆண்டவன் அளந்தபடி.

ஏதோ நடக்குது; கிழம் கட்டைகளைக் கவனிக்கிறேன். அதிலே நான் ஸ்பெசலிஸ்ட்.

"அவனவன் குழந்தை வைத்தியத்திலே ஸ்பெசலிஸ்டா வரான்? நீ முதியவர் வைத்தியத்தை எடுத்துட்டியே?“

இதுதான் தொடர்ந்து வரும்படி தருவது; அவர் களுக்குத்தான் தொடர்ந்து வைத்தியம் செய்துகிட்டிருக்க லாம். ஏதாவது மாறிமாறி வந்துகிட்டிருக்கும் அவர் களுக்குச் செலவு அதிகம் இல்லை. வைத்தியத்துக்குச் சேர்த்து வச்சுகிட்டு இருக்காங்க செலவு செய்யுதுங்க:'