பக்கம்:குப்பைமேடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

ராசீ

"கிட்டே கூடப் போக மாட்டார்கள்".

"காப்பி வைக்கக் கூட அடுப்புப் பற்ற வைக்கத் தெரி யாது. கேஸ் அடுப்புதான் இருந்தாலும் அதுவாவது பற்ற வைக்கத் தெரியுமா?"

"தெரியாது".

"வீட்டுலே தான் இருப்பான் அவன் கத்துக்க மாட்டான்' என்றான்.

"இனிமேல் அவன் வீட்டிலே தான் கிடப்பான்; பெண் தான் வேலைக்குப் போவாள், காலம் மாறும்' என்று பதில் சொன்னேன்.

"ஆமாம்; நம்ம கூடப் படிச்சுக்கிட்டு இருந்தானே 'ரங்கன்", என்ன ஆனான்? எப்படி இருக்கான்?' என்று கேட்டான்.

"நிறையச் சம்பாதிக்கிறான்; பேட்டை ரவுடியாய் மாறிட்டான். வட்டம், அது, இது, புதுப் பதவி, சாரா யம், அதுலே ஆதாயம். அவன் தான் இலஞ்சம் வாங்கி மேலே கொடுக்கிறான்; சதா வீட்டிலே கும்பல் தான்; உங்களுக்குக் கூட இவ்வளவு கிளைண்டுகள் வர தில்லே. அப்பாயிண்ட்மெண்டு முடிவு செய்துகிட்டுத் தான் போகணும்'.

"இப்படியும் ஒரு பிழைப்பா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/178&oldid=1117194" இலிருந்து மீள்விக்கப்பட்டது