பக்கம்:குப்பைமேடு.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அதிர்ச்சி
177
 

இதெல்லாம் இந்திய சுதந்திரத்தின் வளர்ச்சி பெற்ற

நிறுவனங்கள்' என்றான் அவன்.

இப்படி அவன் என்னிடம் பேசிவிட்டுப் போனான். நீண்ட கால இடை வெளிக்குப்பின் சந்திக்கிறோம். மழை விட்டு விட்டுப் பெய்வது போல் அங்கொன்று, இங் கொன்று தொட்டுத் தொட்டுப் பேசுவான்; கேட்பதற்குக் குளிர்ச்சியாக இருந்தது புதுமழை போல.

"ஏன்? இந்த நாட்டை விட்டு வெளி தேசத்துக்குப் போயிட்டே?”.

"தொழில் தேர்வுக்குப் பணம் கொடுத்தால் தான் ஆகும் என்று சொன்னார்கள். இவனுக்குக் கொடுப்பதை விட ஏஜெண்டுக்கே கொடுத்தால் போகுது என்று கொடுத் தேன். அவன் இன்டர் வியூக்கு அனுப்பினான். அவர்கள் பணம் வாங்காமலேயே எடுத்துக் கொண்டார்கள்'.

'நம்ம அமைச்சர்கள் யாரும் வாங்க மாட்டார்களே' என்றேன்.

சிரித்தான்.

'அவன் எதற்குச் சிரித்தான்’ என்று புரியவில்லை.

"எதற்காகச் சிரிக்கிற"?

'உண்மை பேசறியே அதுக்குத்தான்,