பக்கம்:குப்பைமேடு.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அதிர்ச்சி
179
 

"என் மைத்துனர் நல்ல பதவியிலே இருக்காரு யாருக் கும் உதவி செய்யறது இல்லே. அதனாலே அவர் மேலே கடுப்பு; ஒருத்தர் திராவகம் வீசக்கூட முயற்சி செய்தா ராம். தப்பித்துக் கொண்டார்".

"ஏன் அவ்வளவு தூரம் கடுமையாக நடந்துகனும்? ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டியது தான். காந்தி குல்லா, இவருக்குச் சோறு போடுமா?"

"ஐ.பி.எஸ். அதிகாரி இந்தப் படத்தைப் பார்த்தீங் களா? ஒரு பெண் அதிகாரி துணிந்து மேல் இருப்பவரைக் கவலைப்படாமல் அக்கிரமங்களை எதிர்க்கிறாள். அந்த மாதிரி படங்கள் வருவதால் தான் மாஜி ஐ.ஏ.எஸ்.கள் உற்பத்தியாகிறார்கள். நல்லாட்சி மன்றங்கள் அமைக் கிறார்கள் அவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். உங்கள் மைத்துனர் மாதிரி காந்தி சீடர்கள் கையைக் கறைப்படுத் திக கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்" என்றேன். தான் ஒரு நேர்மையான அதிகாரியாக உன் மைத்துனர் இருப்பதற்கு நீ பெருமைப்பட வேண்டும்'. என்று தொடர்ந்தேன்.

"அதற்கு என் உதவியை எதிர்பார்க்கக் கூடாது நான் உதவி செய்யவில்லை என்றால் அவர் மூத்த மகள் சாவித்திரி ஒரு சத்தியவானைக் கைப்பிடித்திருக்க முடியாது".

"நாலுபேர் கைதுக்கி விட்டால்தான் நல்லது" என்றேன்.

"ஏன் அவர்கள் தன் காலிலே நிற்கக் கூடாதா?”