பக்கம்:குப்பைமேடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

ராசீ

சுமை அதிகமாகும் போது மற்றவர்களை ஒரு கை பிடிக்கச் சொல்வதில் தவறில்லை'

'பெண்ணைப் பெற்று விட்ட பிறகு எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என்பது வீண் பிடிவாதம், அதற்கு அவளை வசதியான இடத்திலே தர ஆசைபடக்கூடாது. கேட்டவனுக்குக் கைப் பிடித்துத் தந்து இருக்க வேண்டும்' அவன் பேசுவதை நிறுத்த வழி தோன்றவில்லை.

'நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான்' என்று ஆமோதித்த பிறகு தான் அவன் அடக்கம் காட்ட முடிந் தது. அவ்வளவு நல்ல அதிகாரி இருக்கிறார் என்றால் தவறு செய்யாதது அதிசயமாகத் தான் இருந்தது. பாரத நாடு பழம் பெரும் நாடு என்ற தருக்கு ஏற்பட்டது. அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை தோன்றியது.

–2–

"'உங்களுக்கு அவரைத் தெரியுமா?' என்று பேசிக் கொண்டே எனக்கு வேண்டியவர் என்னைத் தேடி வந்தார்.

'தெரியாது' என்றேன்.

'டாக்டர் உம்முடைய நண்பர் என்று பலபேர் சொன்னார்கள். அவருக்கு மைத்துனர் இவர்.அவர் சொன் னால் இவர் கேட்பார்' என்று உபாயம் கூறத் தொடங் கினார்.

அதிலுள்ள அபாயத்தை விளக்கினேன். அதனாலேயே அவர்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை என்று கேள்வி' என்று சொல்லி வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/182&oldid=1116095" இலிருந்து மீள்விக்கப்பட்டது