பக்கம்:குப்பைமேடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

ராசீ

'நான் எப்படிப் போக முடியும்?"

"'டாக்டரின் நண்பர் என்று போங்கள். எல்லாம் சரியாகி விடும்' என்கிறார்.

என் வீட்டுக்குக் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். என் நண்பரைச் சற்றுப் பொறுத்து வரச் சொன்னேன். அவர் நாகரிகமாக நடந்து கொண்டார்.

'சார், நான் கார்ப்பரேஷனிலிருந்து வந்திருக் கிறேன்'.

'நேரே அங்கிருந்துதான் வருகிறீர்களா? வருக, தங்கள் வரவு நல்வரவாகுக' என்று கூறி வரவேற்றேன்.

"எங்கள் கடமை' என்றார்.

' என்ன தேவை?' என்றேன்.

"உங்கள் வீட்டில் எத்தனை குடித்தனம்' என்று கேட்டார்.

'நாலு போர்சன்; எட்டுக் குடித்தனம்' என்றேன்.

'என்ன தருகிறார்கள்?’’

'ஒரு மாசம் தருவார்கள்; மற்றொரு மாசம் இல்லை என்பார்கள். சில சமயம் அவர்கள் கஷ்டம் தெரிந்து

வாங்காமலும் விட்டு விடுவேன். அது என் விருப்பு வெறுப்பை ஒட்டியது' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/184&oldid=1116097" இலிருந்து மீள்விக்கப்பட்டது