பக்கம்:குப்பைமேடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

183

சார் கிண்டலாப் பேசறிங்க'

'உனக்கு ஏன் அந்த விசயம்? வீடு எத்தனை அடி நீளம் எத்தனை அடி அகலம் பார்த்துக் கொள். அதற்கு ஏற்றபடி வரிபோட்டுவிட்டுப்போயேன். யார்? எது என்று விளக்கம் கேட்பது தேவையற்றதாகப் படவில்லையா?

'முடியாது? சார். அதற்கு எதிர்ப்பு? வழக்கு நடந்து கிட்டிருக்கு'

வீட்டை யும், ச ைட ைய யும் ஒன்று சேர்க்க முடியாது பங்களா பெரிசா இருக்கும். அதிலே இரண்டு பேருதான் இருப்பாங்க. ஏதோ பணம் இருக்குது. கட்டிப்போடு வார்கள்; தோட்டம் அது வேறு இடம் பரப்பு எல்லைக் கணக்குப் போட்டால் பத்தாயிரம், இருபதாயிரம் தர வேண்டி இருக்கும். அவர்களுக்கு வரும்படி இருக்காது. அவர்கள் எப்படி சார் கட்டுவார்கள். சொந்தக்காரர் இருக்கிறார். அவர் பெரிய வீட்டிலே இருக்கிறார். அது அவர் உரிமை அதற்காகத் தண்டிக்க முடியுமா?

'நீங்க ஏன் வரி வாங்கறீங்க'

'தண்ணிர், கால்வாய், தெரு சுக்ாதாரம், குப்பை, விளக்கு, இந்த நகரத்துப் பராமரிப்பு இதற்கெல்லாம்

பணம் தேவைப்படுகிறது. வாங்காமல் என்ன செய்வது?

இன்னிக்கு வீட்டு வசதி இல்லாமல் பல பேரு நெருக் கிக்கிட்டு வாழறாங்க. ஏன் தெரியுமா?"

வீடு கிடைக்காதது தான்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/185&oldid=1116098" இலிருந்து மீள்விக்கப்பட்டது