பக்கம்:குப்பைமேடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

17

'குப்பையை அள்ளவேண்டுமா?"

'இந்தத் தொட்டியை அகற்ற வேண்டும்'.

'நீங்களும் ஒரு கை பிடிக்க முடியுமா?"

'உங்கள் ஆட்களிடம் சொல்லிச் செய்ய வேண்டு கிறேன்'

"சிலுவையைச் சுமக்கும் ஏசுநாதர் ஆவது அரிது; அவர் ஒருவர்தான் இருக்கமுடியும் என்பதைக் காட்டி விட்டீர்' என்றாள்.

'ஏன்மா நீ இங்கே இப்படி வேலை செய்வது சரியாகப் படவில்லை'.

ஏன்?"

'உன் மதிப்பு இழக்கிறாய்; நாளை மணமாக வேண்

டியவள்'.

'அதனால்தான் பழைய வேலையைவிட்டு வந்துவிட் டேன். அந்த வேலையில் நீடித்தால் பலபேர் சிரிக்க வாழ்ந் தாள் என்று என்னை மணக்க வரமாட்டார்கள்' என்றாள் .

அவருக்குப் புரியவில்லை.

பிறரைச் சிரிக்க வைப்பதுதான் அங்கு என் தொழில்' என்றாள்; நான் வரவேற்பாளர்' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/19&oldid=1112720" இலிருந்து மீள்விக்கப்பட்டது