பக்கம்:குப்பைமேடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

ராசீ

நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். அதற்குள் அங்கு வட்டச் செயலாளர் ஒருவர் வந்து கட்சித் தொண்டர் என்று கூறிக்கொண்டு வீட்டில் கால் வைத் தார். அச்சிட்ட இரசீதுகள் கச்சிதமாகக் கையில் வைத்தி ருந்தார். நன்கொடை என்று கைநீட்டினார். அவரை எதிர்த்துக்கொண்டு நான் நிம்மதியாகத் தொழில் நடத்த முடியாது. சொல்லடி படத் தயார். ஆனால் அவர்கள் கல்லடிக்கு அஞ்ச வேண்டியதாயிற்று; கேட். தை மறுக் காமல் கொடுத்தனுப்ப வேண்டியதாயிற்று. இவர்கள் ஜனநாயகம் தோற்றுவித்த தனி நாயகம். மறுபடியும் நண்பர் தொடர்ந்தார். 'எப்படி சார் முடிந்தது' என்று விசாரித்தார், 'சுமுகமாக' என்றேன்.

"அதைத் தான் சார் நான் சொல்றேன். இரண்டு பேரும் ஒத்துப் போகணும்' என்று சொல்லி ஆறுதல் காட்டினார்.

"சட்டத்தை மீறாமல் உதவி செய்தால் யாருக்கும் நஷ்டமில்லை.

கஷ்டம் வராது', என்று விளக்கினார்.

ஏதோ ஒரு புது உண்மை சொல்வது போல இருந்தது.

"சட்டத்தை மீறி யாரும் உதவி செய்யறதே இல்லை, சட்டத்தைச் சாதகமாக ஆக்கி உதவி செய்வதுதான் இலஞ் சம்’ என்று விளக்கம் தந்தார்.

இந்தச் சொல்லே எங்களுக்கு ஒரு வியப்பைத் தந்தது; எப்படி இந்தச் சொல் வந்திருக்கும்? என்று யோசித்துப் பார்த்தோம். வெள்ளைக்காரன் காலத்தில் புகுந்த சாபக் கேடு, இது அந்நியர் ஆட்சியில் அவர்கள் காட்டிச் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/190&oldid=1116103" இலிருந்து மீள்விக்கப்பட்டது