பக்கம்:குப்பைமேடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

189

குறுக்குவழி என்று முடிவு செய்தோம். இதை நம்ப மாட் டீர்கள். lump sum இந்தச் சொல் தான் இலஞ்சம்' என மருவி விட்டது என எங்கள் பேச்சில் தெளிவு செய்து கொண்டோம். மறுபடியும் அவர் தம் சொந்தப் பிரச் சனைக்கு வந்து சேர்ந்தார்.

'பில் வரப் பத்து நாளாகும்; எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

"எங்களுக்குப் பெரிய இக்கட்டு இந்தப் பில் காலந் தாழ்த்துவதால்' என்றார்.

நாங்கள் என்ன சொந்தப் பணம் போட்டா தொழில் செய்கிறோம்?

வட்டிக்குப் பணம் வாங்கி முதலீடு செய்கிறோம். தவணையில் கட்டாவிட்டால் தந்தவர்கள் செய்யும் கெடு பிடி தாங்க முடியாது. அதனால் கூடுதல் வட்டிக்கு வாங்குகிறோம். இவை எல்லாம் சேர்ந்து தான் விலைவாசி கூடுதலாகிறது. உண்மையில் நிறுவனங்கள் பில்களைத் தாமதம் செய்யாமல் இருந்து பட்டுவாடா செய்தால் தொழில்கள் எல்லாம் நசிந்து போகாமல் தலை எடுத்து வாழும். இந்தப் பிரச்சினையை இதுவரை யாரும் கவனிக்காதது கொடுமையானதுதான். நாங்கள் என்ன விரும்பியா கொடுக்கிறோம். அல்லது மிகுதியாகியா கொடுக்கிறோம். நாங்கள் விடும் கண்ணிர் அவர்களுக்குக் கொடுக்கும் இலவசத் தொகையை நனைத்துத்தான் கொடுக்கிறது; ஊழல், ஊழல் என்று கோஷம் போடுகி றார்கள். ஆனால் கால தாமதத்தைத் தவிர்க்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நாங்கள் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/191&oldid=1116104" இலிருந்து மீள்விக்கப்பட்டது