பக்கம்:குப்பைமேடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

191

'அதுக்கு ஏன் போலீசு?"

காசு கொடுத்து அவரை வாங்க முடியாதவர்களைக் கட்டுப்படுத்த' என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே போனான்.

அப்படி யார்ரா உன்னைப் படம் பார்க்கச் சொன்னது".

'அடிக்கடியா போறோம்? எப்போதோ ஒரு முறை. கியூவிலே நின்று டிக்கெட் வாங்கக் காலையிலே சோறு கட்டி எடுத்துக் கொண்டு போக வேண்டியது தான்' என்றான்.

என்னடா அப்படி அந்தப் படம்'?

'தனி மனிதனும் சமுதாயமும்'

'இது என்னடா புதிய கதை'?

'தனி மனிதன் ஒழுங்காக இருந்தால்தான் சமுதாயம் ஒழுங்காக இருக்கும் என்று கதை சொல்கிறது'.

"அதைப் பார்த்து என்ன தெரிஞ்சுக்கிட்டே?”

"கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வாழ முடியும் இல்லையேல் அழிய வேண்டியதுதான். காரணம்? நேர்மை யாக வாழ்ந்தால் அழிந்து போகிறான். அதனால் கொஞ் சம் வளைந்து கொடுத்து வாழக்கற்றுக் கொண்டேன்.

அரிச்சந்திரன் படத்தைப் பார்த்தால் அரிச்சந்திரனாக வாழ்ந்தால் என்னென்ன தீமைகள் உண்டாக, முடிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/193&oldid=1116105" இலிருந்து மீள்விக்கப்பட்டது