பக்கம்:குப்பைமேடு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

193

அவர் செயலில் வாழ்கிறான். ஒரு காந்தி அவர் பின்னால் நின்று உறுதி தருகிறார். சான்றோர்கள் வாழ்வு அவனைச்சரிவு ஆகாமல் தடுக்கிறது. வள்ளுவம் அவன் செயலில் வாழ்கிறது.

'அந்தக் குழந்தை என்ன ஆயிற்று?

'அதுதான் வியக்கத்தக்க முடிவு ஆபரேஷன் இல்லாம லே பிழைத்துக் கொள்கிறது. இது மருத்துவரின் வீண் மிரட்டல். தொழில் உத்தி, 'அறம் வெல்லும்' என்ற நம் பிக்கைக்கு அவர் வாழ்க்கை உதாரணமாக அமைந்தது' என்று கூறி முடித்தான்.

'நேர்மை வெற்றி தானே பெற்றது'? என்ற வினா வினை நான் தொடுத்தேன்.

'கதை தீமை வென்றது என்று முடித்தால் அது ஒடாது. உண்மைகளைச் சொல்லக் கதை தேவையில்லை. எப்படி நடக்க வேண்டும் என்பதைக் காட்டுவது தான் கதை. அதை மக்களும் புரிந்து கொள்கிறார்கள். எதிர்மறை யான பதில்கள் தான் ஏற்படும்.

அந்தக் குழந்தையின் இறப்பை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவருக்கு இருந்த உறுதி மற்றவர் களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதனால் நேர்மை தான் வெல்லும் என்று முடிந்தாலும் அது வெல்லாது என்பது தான் எடுத்துக் கொள்ளும் செய்தி" என்று விளக்கம் தந்தான்.

"நீ செய்தது தவறு என்று தெரியவில்லையா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/195&oldid=1116107" இலிருந்து மீள்விக்கப்பட்டது