பக்கம்:குப்பைமேடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

ராசீ

'தவறு ஒன்றுமில்லை; என்னால் ஒரு ஆள் பிந்திப் போகிறான். அவ்வளவு தான்; அந்தப் போலீசுகாரர் சம்பளத்தை மட்டும் நம்பி எப்படி வாழ முடியும்? சட்டங் கள் கடுமையாக ஆக ஆக அதிகாரிகளுக்கு வாய்ப்புகள்

மிகுதி'.

'மதுவிலக்குத் துறை என் கண்முன் நின்றது.

மது விலக்க முடியாது; அதனால் அதிகாரிகள் பெறும் குறுக்கெழுத்துப் போட்டி நிற்கவும் பெறாது என்பது என் நினைவில் நின்றது'.

போய்ப் படி' என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தேன்.

என் வீட்டுக்கு வந்த நண்பர் எனக்கு வேண்டியவர். அவர் அப்பா இல்லாமலிருந்தால் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. அவர் சொல்லித்தான் அற நிலையத்தாரிடம் வேலை கிடைத்தது. நம்ம பையன்' என்று என்னைச் சிபாரிசு செய்து உத்யோகம் வாங்கித் தந்தார்.

அறநிலையத்தார் என்று கூறும் போது ஒரு கோவில் நிருவாகத்தினர் ஒரு இளைஞனைத் தூக்கில் மாட்டி விட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பரப்பிய செய்தி நினைவிற்கு வருகிறது. தங்கமான பையன். திருக் குறளை நம்பிக்கெட்டு விட்டான். கோயிலில் முக்கிய மான நகை ஒன்று இல்லை. அதை விற்றுவிட்டு அந்த இடத்தில் போலி நகை வைத்து இருந்தார்களோ இல்லையோ தெரியாது. அவன் அக்குறையைச் சுட்டிக் காட்டினான். அவனை விட்டு வைத்தால் அவன் அம்பலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/196&oldid=1116109" இலிருந்து மீள்விக்கப்பட்டது