பக்கம்:குப்பைமேடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

ராசீ

ஏழை படும் பாடு என்னும் கதை விக்டர் யூகோ எழுதி யது. சுத்தானந்த பாரதியார் தமிழாக்கம் செய்துதந்தார். படம் பல நாள் ஒடியது. ஒரு ரொட்டித் துண்டுக்காக அவன் சிறை புகுந்தான். இன்று கோடிக் கணக்கில் ஊழல் கள் அவை ரொட்டித் துண்டுக்காக அல்ல. இந்த நாட்டை வெட்டிச் சூறையாடுவதற்கு. ஏழைகள் ரொட்டித் துண்டுக்கு அவதியுற வளர்ச்சிக்கு வேண்டிய பணம் தனி ஒருவனின் உடைமையாகிறது. அவன் அமைச்சர்களைக் கையாளாக்குகிறான். நீதி மன்றங்களை நிலைகுலையச் செய்கிறான். அவர்கள் எல்லாம் சகலமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்.

இன்று வளரும் பையனை நாளைக்கு நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டால் அவன் என்ன சொல்வான்’

நான் டாக்டராவேன்; இன்சினியர் ஆவேன் என்று சொல்லியவர்கள் எல்லால் மேத்தா' ஆவேன் என்று கனவு காண்கின்றனர். அவன் யாரைச் சுட்டுகிறான் என்பது விளங்கவில்லை. இவர்கள் இளைஞர்களைத் துண்டுகிறார் கள்; வழி காட்டுகிறார்கள். தேசத்தின் சிந்தனைச் சிற்பி களை’ முன்பெல்லாம் அறிஞர்கள் என்று கூறி வந்தார்கள். புரட்சிக்கு வழி கூறியவர்கள் சிந்தனைச் சிற்பிகள்' எனப் பட்டனர். இன்று இந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலை வனை "அறிவின் சிகரம்’ என்று பாராட்டுகிறார்கள்.

தேசத்தின் தந்தை காந்தி அந்நிய நாட்டினரிடமி ருந்து இந்தத் தேசத்தை விடுவித்தார். அதை இவர்கள் ஆக்ரமித்தார்கள். அவ்வப் பொழுது வான வேடிக்கைகள் போல இவர்கள் ஊழல்கள் பத்திரிகைகளில் வந்து கொண் டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/198&oldid=1116111" இலிருந்து மீள்விக்கப்பட்டது