பக்கம்:குப்பைமேடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

197

சட்டத்திற்குட்பட்டு என் நண்பருக்கு உதவி செய்தால் தவறு இல்லை என்று என் மனத்தில் பட்டது. கியூவை உடைத்துச் சற்று முன்பின் தள்ளுவதால் பெரிய இழப்பு கள் நேர்ந்து விடுவதில்லை. அதனால் இவனுக்கு உதவி செய்வது நியாயம் என்றே பட்டது.

'நன்றி' என்ற சொல் என்னைச் செயல்பட வைத்தது. அன்று அவர் அப்பா எனக்குச் செய்த உதவி சிறிதுதான். 'நம்ம பையன்', 'நமக்கு வேண்டியவன்' என்று சொன்னது இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவரது வாஞ்சை எனக்கு உதவும் வேட்கை அதை என்னால் மறக்க முடிய வில்லை.

-5

அதற்கு மேல் அவர் தொடர்ந்தார். அவர் மைத்துனர், உனக்கு நண்பர் உன்னோடு ஒன்றாகப் படித்தவர். நீ சொன்னால் அவர் மறுக்க மாட்டார். அது மட்டுமல்ல, தன் மைத்துனர் முன்னுக்கு வர வாய்ப்பு. அதை உன் நண்பர் தவற விட மாட்டார். நீ அவரோடு அதிகாரி வீட்டுக்குப் போ, பழகிக்கொள், எறும்பு ஊரக் கல்லும் தேயும்; சொல்லச் சொல்ல மனம் மாறும். ஒரு முறை பழகி விட்டால் அதிலிருந்து விடுபட முடியாது. கை தானாக மேலே எழும்; அது மட்டுமல்ல அது இல்லாமல் எதுவும் செய்யாத சூழ்நிலை வரும்' என்று எனக்குப் போதிக்க ஆரம்பித்தார்.

அவர் சொல்வது ஒரளவு உண்மைதான். எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர் அழகாக வீடு கட்டி இருக் கிறார். அவர் வாங்கும் சம்பளத்திற்கு அந்தக் கட்டிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/199&oldid=1116112" இலிருந்து மீள்விக்கப்பட்டது