பக்கம்:குப்பைமேடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ராசீ

இந்தக் கேவலமான தொழில் செய்தால் யாருமே

உன்னைச் சீண்டமாட்டார்கள்' என்றார்.

‘'வேண்டப்பட்டவர் பலர் இருப்பார்கள். கவலைப் படாதீர்கள், உங்களுக்குப் பையன் இருக்கிறானா சொல்லுங்கள் அவனையே மணந்து காட்டுகிறேன்' என்று வேடிக்கையாகச் சொன்னாள்.

அந்த நேரத்தில் அந்த வீட்டுச் 'சுந்தரன் ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு வந்து வெளியே நின்றான்.

யார் அப்பா இந்தப் பெண்?

அவளோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்: 'நம் சொந்தக்காரரா?" என்று கிண்டலாகக் கேட்டான்.

"என் வருங்கால மருமகள் உனக்காகப் பேசுகிறேன்" என்று அவரும் கிண்டலாகப் பதில் சொன்னார்.

அவன் அது உண்மைதானா என்று சந்தேகப் பட்டான்.

அவளுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்று முடிவு செய்தான்.

அவன் அகன்ற பிறகு பெரியவரிடம் அவள் பேச்சுக் கொடுத்தாள்.

'உங்கள் பையனா'

"பையன்தான்' என்றார்.

"நான் சந்தேகப்படவில்லை' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/20&oldid=1112721" இலிருந்து மீள்விக்கப்பட்டது