பக்கம்:குப்பைமேடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

ராசீ

திற்குத் தாங்கும் சக்தி கிடையாது இன்று பல்கலைக் கழ கம் மாறிவிட்டது. தேர்வுத் தாள்கள் மைய இடத்துக்குக் கொண்டுவரப் படுகின்றன. அப்பொழுது எல்லாம் நேரே தேர்வாளர் முகவரிக்குச் செல்லும். அது செல்வதற்கு முன் முகவரி அறிந்து முகங்காட்டும் தரகர்கள் பலபேர் பிழைத்து வந்தார்கள். கேட்டால் தலயாத்திரை' போவ தாகச் சொல்வார்கள். அவர் காசு பெறாமல் எந்த உதவி யும் செய்ய மாட்டார். முப்பத்தைந்துக்கு மேல் ஒரு பத்து போட்டால் போதும். எதுவும் சரியாக எழுதா விட்டா லும் பரவாயில்லை. வீட்டில் உட்கார வைத்து மதிப் பெண் போடுவார். திறமை சாலி; அதற்காகவே அந்த மாணவர் கள் வெறுந்தாள் உடன் இணைத்து வைப்பர். மற் றொன்று அவன் இயல்பாகத் தேறினாலும் அது தன் கை வண்ணம் என்று சொல்லிக் காசு வாங்குவார். அவரை எல்ாலாரும் விரும்பினார்கள். 'மனுசர் நல்லவர், காசு கைநீட்டி வாங்கிவிட்டால் நாணயம் தவற மாட்டார்’ என்ற நற்சான்று அவருக்கு வழங்கப்பட்டது.

-6

டாக்டர் ரகு என்னோடு வந்தார். நான் டியூரிங் டாக்சி ஒன்று ஒடவிட்டேன். அது சில சமயம் சொந்த உபயோகத்துக்கு,ப் பயன் பட்டது. சொந்த காரில் சென் றால் அதற்கு வரவேற்பு இருந்தது. இந்த வீட்டு முன் னால் டாக்டர் கார் மட்டும் தான் போகும் அந்த அதி காரியை நாடி ஒரு ஈ காக்காய் கூட வராது. வீட்டுக்கு வருவதை அவர் விரும்புவது இல்லையாம். அதற்காகவே விளம்பரப் பலகையை எடுத்து விட்டாராம். வக்கீல்கள், வைத்தியர்கள் விளம்பரம் போட்டுக் கொள்வதில் பொருள் இருக்கிறது. அதிகாரிக்குத் தேவை இல்லை என்று முரட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/200&oldid=1116114" இலிருந்து மீள்விக்கப்பட்டது