பக்கம்:குப்பைமேடு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

199

தனம் பிடிக்கிறார். அது இருந்தால் விரும்பித் தீமையை விலைக்கு வாங்குவது என்பது வாதம்.

சில சமயம் போலீசு அதிகாரி வீட்டிலேயே கொள்ளை யர்கள் நுழைகிறார்கள். அது அவர்கள் எடுத்துக்கொள் ளும் சவால். அவர்கள் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் அறைகூவலாக அமைந்து விடுகிறது. காவல் அதிகாரிகள் போர்டுகள் போட்டுக்கொள்வதில் இத்தகைய கெடுதல்கள் சில சமயம் நிகழ்ந்து விடுகிறது. இவர் வீடு பிரபல்யமான வீடல்ல. என் நண்பர் உடன் வராவிட்டால் அடையாளங் காட்டக்கூட ஆள் இருக்காது. நாங்கள் போய் இறங்குகிறோம். அந்த வீட்டு மூத்த பெண் சீர் குலைவோடு மேலே ஒரு பெண் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு சரணாலயத்தில் வந்து இறங்கினாள்.

கம்பராமாயணத்தில் ஒரு இடம் வருகிறது. இராமன் சீதையைப் பிரிந்து இருக்கிறான். அவள் திருமுகத்தைக் காணத்தேடுகிறான். அங்கு இருக்கும் தாமரைக்குளத்தை நாடுகிறான். தாமரையே! என் இதயத்தாமரையில் இருக்கும் எழில் மிக்கவளை நீ கண்டாயா? பெண் புகு மிடம் பிறந்த வீடுதானே. அவள் திருமகள், தாமரையில் பிறந்தவள். அதனால் உன்னிடம்தான் வந்து அடைக்கலம் அடைந்திருப்பாள். அவளை எனக்குக் காட்டாயோ?" என்று கேட்கிறான். அந்தப் பாடல் அடிகள்தான் என் நினைவுக்கு வந்தன.

கணவன் அவளை அடித்துத் துரத்தி இருக்கிறான். அல்லது மாமியார் சீர் கொண்டு வந்து சேர் என்று சொல்லி அனுப்பி வைத்திருப்பாள். அங்கே அவள் அந்தக் குழந்தை தன்னைத் தாய் என்று உயர்த்திவிட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/201&oldid=1116116" இலிருந்து மீள்விக்கப்பட்டது