பக்கம்:குப்பைமேடு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

201

இவ்வளவு தேவைகளை வைத்துக் கொண்டு காந்தியின் சீடராக எப்படி இவர் வாழ முடியும்? இவை நல்ல சகுன மாகப்பட்டன.

டாக்டர் முகத்தில் வினாக்குறி வளைந்து காணப்பட் டது. கவலையும் கோடு விட்டது. எப்படியும் அவர்கள் தம் மேல் சாய்வார்கள் என்ற நிலையை அவரால் உணர முடிந்தது. ஏன் வந்தோம்? என்று ஆகிவிட்டது. பிள்ளை யார் பிடிக்கப் பூதம் புறப்பட்டது.

'இதுதான் சார் என் தங்கை வீடு' என்று அதன் சரித் திரத்தை விரித்துவைத்தார். என் அப்பா இவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து மொட்டையாகி விட்டார்கள். நல்ல காலம்? நான் மட்டும் படிக்கவில்லை என்றால் இவர்களுக்குக் கொட்டி அழிவதிலேயே சரியாக இருக்கும் என்று தனிமொழி பேசினான். வீட்டுக்கு வந்த தம்பியை கேட்டுக்கு வெளியே நிற்க வைக்காமல் வரவேற்பதா? உல்லாசப் பயணம் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மூத்தவளை வரவேற்பதா என்று தெரியாமல் திக்கு முக் காடினாள்.

என் கார் அது என்னிடம் விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டது. அதற்கு ஏற்கனவே அழைப்புப் பதிவாகி இருந்ததால் அது வந்து என்னை அழைத்துச் செல்ல மணி இரண்டு ஆகும். அதுவரை அங்கு உட்கார்ந்து வரட்டு பத்திரிகைகளையும், வானொலி திரட்டும் செய்திகளையும் கேட்டுக் கொண்டு இருப்பதைவிட வேறு வழியில்லை. டாக்டர் மட்டும் தான் தனியாக அந்த வீட்டுச் சலசலப்பில்

l4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/203&oldid=1116118" இலிருந்து மீள்விக்கப்பட்டது