பக்கம்:குப்பைமேடு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

ராசீ

மொசைக் இல்லாத வீடு ஒரு வீடா? என்றுகேட்டார்.

'ஜன்னல்கள் பழையபடி கம்பி போடுங்கள் உறுதியாக இருக்கும்' என்பேன்.

'முடியாது, அச்சுப்படம் வார்ப்புகள் வைத்தால்தான் அழகாக இருக்கும்' என்பார். கொசு வராமலிருக்க வலை கட்டிக் கொள்ளலாம்' என்பேன்.

'இல்லை, ஒவ்வொரு ஜன்னலுக்கும் வலை போட்டால் கொசு வராது, என்பார். தேவைக்கு மேல் அறைகள் எதற்கு?" என்பேன். எதிர்காலத் தேவையை எப்படி முன் கூட்டிச் சொல்ல முடியும்' என்பார்.

'இப்பொழுது பெண் பெற்று வைத்து இருக்கிறாய். நாளைக்கு மருமகன் வந்தால் தனியறைவேண்டாமா? என்பார்.

'மாடத்திலே சாமி படம் மாட்டிப் பூசை செய்ய லாம்" என்பேன்.

'அதற்குத் தனி அறை தேவை. ஒவ்வொரு வீட்டிலும் தனி பூசை அறை இருந்தால்தான் நிம்மதியாக அரைமணி நேரமாவது தியானம் செய்ய முடியும்?' என்று சொல் வார். படுக்கை அறை?" என்பேன்.

'அது கிடக்குது. தேவை இல்லை" என்பார். இதற் கெல்லாம் பணம் எங்கே போவது?" என்பேன்.

'உருண்டு புரண்டு எழ வேண்டும்' என்பார். இப்படி ஏட்டிக்குப் போட்டி, என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/208&oldid=1116124" இலிருந்து மீள்விக்கப்பட்டது