பக்கம்:குப்பைமேடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

19

"கொஞ்சம் வெட்கப்படுவான்'

நான் பார்த்துக்கறேன் கவலைப்படாதீர்கள்' என்றாள்.

"என்ன சொல்கிறாய்"

'உங்கபையனை எனக்குப்பிடித்து இருக்கிறது'

'கூட்டலோடு நிற்க மாட்டே போல் இருக்கே"

'வீட்டையும் பெருக்குவேன்; மருமகள் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் எல்லாம் எனக்கு இருக்கிறது இனப் பெருக்கலுக்கும் துணையாக நிற்பேன்' என்றாள்.

'சனியன் நீ எங்குவந்து சேர்ந்தாய்' என்று கோபித் துக் கொண்டு, தன் சிறைக்குள் சென்று அடங்கிக் கொண் டார்.

அவர் வீட்டைச் சிறையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. எப்பொழுதும் அவர் அந்த வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பார்; வெளியே சென்று அதிகம் பார்ப்பது இல்லை. ஞாயிறு மட்டும் சூரியன் தோன்று வான். அவரும், அவர் மனைவியும், மகனும் சர்ச்சுக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன். சூட்” போட்டுக் கொண்டு காய்கறி வாங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன். அது அவர் உத்தியோகத்தில் இருந்தபோது தைத்தது; போட்டுச் கொள்ள வாய்ப்பு இல்லை. காய்கறிக் கடைக் குத் தானே போட்டுக் கொண்டு போகமுடியும்.

அவள் அவனை மணந்துகாட்டுவதாக உறுதி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/21&oldid=1112796" இலிருந்து மீள்விக்கப்பட்டது