பக்கம்:குப்பைமேடு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

209

துணிந்து தான் ஒத்துவரக் கூடியவள் அல்லள் என்பதை அழகாக்குகிறாள். அந்த இடம் மறக்க முடியாது. அந்தக் காட்சி தான் அந்தப் பெண் எனக்கு நினைவுறுத்தி னாள். அந்த வீட்டின் இரண்டாவது அத்தியாயம் காயத்திரி; முகம் மெளனராகமாக விளங்கியது. எந்த எதிர்ப்பையும் அவள் காட்டவில்லை. வாழ முடியாமல் வீடு திரும்பும் வினோதங்கள் அவளுக்குப் புதுமையல்ல. கல்லூரியில் படிக்கும் தோழியர்கள் தம் வீட்டு நிகழ்ச்சி களைச் சொல்லும் பொழுது மூத்தவள் வாழ முடியாமல் வாபஸ் ஆகி விட்டதைப் பலர் எடுத்துச் சொல்லி இருக்கி றார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு கால கட்டத்தில் ஏற்படும் சிறு அசதி என்பது அவளால் கணிக்க முடிந்தது. அதனால் அங்கு என்ன நடந்தது என்று கேட்க அவளால் செயற்பட முடியவில்லை.

டாக்டர் ரகு அவருக்குக் கொஞ்சம் பி.பி ஏற்பட்டது போலிருந்தது.

"அவனை ஏன் விட் டுவிட்டு வந்தே? படிச்சவ, பேசாம ஒரு கம்ப்ளைண்டு கொடுத்திருந்தால் அவன் கம்பி எண்ணி

யிருப்பான்". டாக்டர் வக்கீலாக மாறிவிட்டார்.

"நீங்க வக்கீலா, டாக்டரா?' என்றேன்.

'இல்லை; யாரும் எவரும் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க முடியாது. அதைவிட ஏன் ஒரு குற்றவாளியாக மாறத் தயார். இன்று ஏன் குற்றவாளிகள் அதிகமாகின் றனர். கொடுமைகள் தலை விரித்தாடும் பொழுது அடிமை களாகவா இருக்க முடியும்? குனியக் குனியக் குட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். பணியப் பணிய அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/211&oldid=1116137" இலிருந்து மீள்விக்கப்பட்டது