பக்கம்:குப்பைமேடு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

ராசீ

வாலிப வேகம் இலட்சியத்தைப் பற்றிப் பேசியது. அதற்கு மேல் அவனிடம் வாதம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

'உன்னை இன்ஜினியருக்குப் படிக்க வைத்தேன். அதற்கு டொனேஷன் கொடுத்தேன். அந்த அளவாவது செய்தால் ஒப்புக் கொள்ளலாம்' என்றேன்.

'அவர் தந்தை நேர்மையானவர். எதையும் சேர்த்து வைக்க முடியாது. பழைய சொத்து எல்லாம் முதல் பெண்ணுக்கே கரைந்து விட்டது. அந்தப் பெண் அங்கே வந்து வாழா வெட்டியாக உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கே அவர் சொன்ன வார்த்தை காப்பாற்றவில்லை என்ற அழுகை' என்று விளக்கினேன்.

'ஏன்? பிராமிசரி நோட்டு எழுதிக் கொடுத்தாரா?

சொல் ஒன்று தானே. எப்படியும் இலட்ச ரூபாய் ரொக்கமாகத் தருவதாகச் சொன்னதால்தானே அந்தப் பையன் திருமணம் செய்து கொண்டான்'.

'வாங்கிக் கொண்டு மண மேடை ஏறி இருக்க வேண் டும். இப்பொழுது வந்து முறையிட்டால் என்ன பயன்?"

"அதைத் தான் நானும் சொல்கிறேன். எது கொடுத் தாலும் கல்யாணத்திற்கு முன்னாலே தரச் சொல்ல வேண் டும் அப்புறம் ஆறிய கஞ்சி பழங் கஞ்சி. மூத்த மாப் பிள்ளையாவது வளைந்து கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறான். நீ அப்படி நடந்து கொள்வாய் என்பது என்ன நிச்சயம். நீ காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கறே. பின்னால் கண்டிப்பா இருக்க முடியாது. அவன் அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/214&oldid=1116140" இலிருந்து மீள்விக்கப்பட்டது