பக்கம்:குப்பைமேடு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

213

பார்த்து முடிவு செய்தது. அதனால் அதிகம் கேட்டால் கசந்து கொள்ள வேண்டியது' என்று விளக்கினேன்.

என் மனமே என்னை உறுத்தியது. என் மகனை மரு மகளோடு வாழாமல் பிரித்து வைக்கும் வித்துக்கள் என் வாய்ச் சொற்களில் கிளம்புவதை அறிகிறேன். வெட்கப் படுகிறேன். அவனுக்கு வெளியே போனால் சொத்தோடு பெண் வரும். குறைந்தது பத்தாவது வர வாய்ப்பிருக் கிறது.

இவள் அழகாக இருக்கிறாள் என்று பிடிவாதம் பிடிக் கிறான். பெரிய பெண் பரத நாட்டியம். சங்கீதம் எல் லாம் கற்றுக் கொண்டு பார்க்க இலட்சணமாக இருக் கிறான். இதனால் அவள் பண்படுத்தப் பெற்று அடக்கம் காட்டுகிறாள். இவள் தூக்கி எறிந்து பேசி விடுவாள் போலத் தெரிகிறது.

எப்பொழுது இவள் துப்பாக்கி ஏந்திச் சுடக் கற்றுக் கொண்டாளோ அப்போதே அவளிடம் அடக்கம் என் பதை எதிர்பார்க்க முடியாது. அதைத் தவிர்ப்பது தான் உத்தமம் என்று பட்டது. என்ன செய்வது? டாக்டர் ரகு வந்து தலையிடுகிறார்.

அவருக்கு என் பையன் மேல் எப்பொழுதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் ஏன் என் வீட்டுக்கு அடிக்கடி வருகிறார் என்பது இப்பொழுது தான் விளங்கு கிறது.

'டே, உன் பையன் இன்ஜினியர் படித்து முடித்து விட்டானாமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/215&oldid=1116141" இலிருந்து மீள்விக்கப்பட்டது