பக்கம்:குப்பைமேடு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ராசீ

'வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுகிறான்' என்றேன்.

‘'வேலை என்ன பிரமாதம்; எதுவும் இல்லை என்றால் சுய வேலை வாய்ப்புத் திட்டம் இருக் கவே இருக்கிறது. ஒரு பிராஜெக்ட் தயார் செய்யட்டும். ஒரு நட்டு செய்தால் கூட போதும், பெரிய பெரிய நிறுவ னங்களுக்கு சப்ளை செய்யலாம். பணம் மின்ட்' பண்ண லாம். நல்ல எதிர்காலம் அவனுக்குக் காத்திருக்கிறது. எவ்வளவு லோன்' வேண்டுமானாலும் வாங்கலாம். எனக்கு சிபாரிசு இருக்கிறது. தள்ள வேண்டியதைத் தள்ளினால் அது அது தானாக நடக்கிறது. நீ கவலைப் படாதே' என்று சொல்லி ஊக்கினான்.

நான் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து விட்டேன். அவன் நாலு ஊரு பார்த்தவன். வெளி தேசங்களைக் கண்டவன்; பர்மிட் , எக்ஸ்போர்ட் அது இது எல்லாம் எனக்கு எங்கே விளங்கப் போகிறது. அவனுக்கு விசா, பாஸ்போர்ட் எக்சேஞ்சு, டாலர், பவுண்டு பங்கு பத்திரம் இதெல்லாம் தண்ணிப் பாடம். டாக்டர் அதனால் பலர் அறிமுகம், எதையும் அவனால் சாதிக்க முடியும். அவனை உதறித்தள்ள முடியாது. 'என் அக்கா பெண்ணுக்கு நான் இடம் பார்த்தால் என் கடமை முடியும். அது ஒன்று தான் எனக்குக் கால் கட்டு ' என்பான். அவள் போகும் பொழு தெல்லாம் ஒ' வென்று அழுவாள். எல்லாம் பெண்ணாக பிறந்து விட்டது. நான் அதிர்ஷ்ட கட்டை என்கிறாள்.

உனக்கு என்ன இரண்டும் தங்க விக்ரகங்கள்' என் பான். அவர்களை வைத்து உருக்கவா முடியும்?' என்று கண்ணிர் பெருக்குவாள். 'இந்த விக்ரகங்களைத்திருடனிடம் கொடுத்தால் கூட என்ன கொடுக்கறே என்று கேட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/216&oldid=1116142" இலிருந்து மீள்விக்கப்பட்டது