பக்கம்:குப்பைமேடு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

ராசீ

'அப்படி ஒன்றும் தவறாக நடந்திருக்க மாட்டானே?"

'அவளுக்கு வாக்குத் தந்திருக்கிறான். அவளை மணப் பதாக.'

'அவன் என்னிடம் சொல்லவே இல்லையே."

'அது எப்படிச் சொல்வான்? அது அதுக்குக் காலம் வர வேண்டாமா?’’

பாவிப்பயல் தவறு செய்து விட்டான். அவசரப்பட்டு விட்டான். டாக்டர் பெண்ணைக் கேட்டால் அவர் மறுப்புச் சொல்லியிருக்க மாட்டார். வெளி நாட்டிலே இருந்து நிறைய வைரம், தங்கம் எல்லாம் கொண்டு வந்தி ருப்பான். ஒரே மகள்; செல்வாக்கு உடையவன்; என்று வருத்தப் பட்டேன்.

இப்பொழுது மட்டும் என்ன முழுகி விட்டது. சொல் லிப் பார்த்தால் ஒப்புக் கொள்ளா திருக்க மாட்டான். அம்மா சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது எனக்கு அந்த நண்பருக்கு உதவி செய்யும் கடப்பாடு வேறு காத்திருந்தது. அப்படிச் செய்தால் எனக்கும் ஒரு பெரிய தொகை கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். வேண்டாம் என்று தள்ளவில்லை. வேண்டும் என்று சொல்ல வில்லை.

முதலில் காரியம் ஆகட்டும். அந்த ஆள் கொஞ்சத் தில் மசியப் போவது இல்லை. என்று முடிவுக்கு வந்தேன்.

என் தொடர்பு பெண்ணின் அப்பாவிடம் ஏற்பட்டது. ஞாயிறு அதனால் அவர் வீட்டில் இருப்பார் என்று தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/218&oldid=1116144" இலிருந்து மீள்விக்கப்பட்டது