பக்கம்:குப்பைமேடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ராசீ

இது மங்கம்மா சபதமாகப் பட்டது.

குப்பைத் தொட்டியை அகற்றுவதைவிட அவளை அந்தத் தெருவுக்குள் வருவதைத் தடுக்கப் பெரிதும் முயன் றார். அவளை மாற்றி வேறு எங்காவது போடும்படி அவர் செய்த முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அவர் பையனை அவளைச் சுற்றிவரச் செய்யாமல் அவரால் முடியவில்லை. அது அவனுக்கு சவுகரியமாகியது, அப்பா வின் பார்வை அவனை விட்டு அகன்றது.

அவர்கள் காதலர்கள் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தது. எனக்குச் செய்திகள் அவ்வப்பொழுது செவி யில் பட்டுக் கொண்டிருந்தன.

அதற்குத் துணை செய்தது அங்கு அடிக்கடி தோளில் கோணிப்பையைச் சுமந்து கொண்டு வந்த குப்புசாமி தான் .

இந்தப்பெண் அசடு அதனால் அவள் என் எழுத்தைக் கவர்ந்தாள். பெரியவர் ஒரு முசுடு அதனால் அவரைப் பற்றி எழுதினேன். அவர் மகன் ஒரு குருடு காதலுக்குக் கண் இல்லை என்பதால் அவளைச் சுற்றிக் கொண்டிருந் தான். அதனால் அவனைப் பற்றி எழுதவேண்டி இருந்தது. இந்தக் குப்புசாமி யார்? கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு அந்தக் குப்பை மேட்டைச் சுற்றுகிறான்.

என் சமூகப் பார்வை அவனையும் கவனிக்கச் செய்தது இவன் ஒரு சரடு'. யாரைப்பற்றியாவது ஏதாவது அளப் பான். எச்சில் இரவுகள்’ என்னும் படம் பார்த்திருக் கிறேன். அதற்கப்புறம் இந்த மாதிரி பாத்திரங்களில் என் கவனம் சென்றது. அதற்கு அவர்க்கு அவார்டு கிடைத்தது இதற்கு ரிவார்டு கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/22&oldid=1112797" இலிருந்து மீள்விக்கப்பட்டது