பக்கம்:குப்பைமேடு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

ராசீ

தொடங்கின. இவர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சொன்ன இடத்தில் கையொப்பமிட்டு உதவியதால்தான் இந்தப் புதிய மாற்றம். அவர் சொல்வதை அமைச்சர்களும் அங்கீ கரித்து உதவினார்கள். அவர்களுக்கு வேண்டியவர்கள் நான்கு பேர்களுக்குச் சலுகை காட்டினால் தனக்கு வேண் டியவர்கள் நாலுபேரை உள்ளே நுழைக்க முடிந்தது.

அவருட்ைய தோற்றத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட் டது. இப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட போட்டோ வில் மீசை அவரிடமிருந்து விடுதலை பெற்று விட்டது. அது கறுப்பா, வெளுப்பா என்ற ஆராய்ச்சி என்னை விட்டு அகன்று விட்டது. தனக்கு என்று இருந்த கடைப் பிடிப்புகள், கொள்கைகள், உறுதிகள் அவரை விட்டு நீங்கி அவரை எளிமைப்படுத்தி விட்டதை உணர முடிந்தது.

காட்சிக்கு எளியராய்க், கடுஞ்சொல் நீங்கியவராய் உல கம் விரும்பக் கூடிய விலைப் பொருளாக மாறி விட்டார்.

இவர் வளர்த்து வந்த நாய் இதற்கு முன்னால் மரி யாதை காட்டி வந்தது. அதுகூடத் தைரியமாக அவர் மேல்

விழுந்து புரண்டு பிராண்டியது.

காந்தி சீடரைப் பார்க்க முடியாமல் போய் விட்டது. காந்தி படத்தை அவர் அகற்றி அந்த இடத்தில் ஆளும் கட்சித் தலைவர் படத்தை மாட்டி வைத்தார். அது அவர் தேசப் பற்றைக் காட்டியது. நாட் டின் ஆளும் தலைவரை மதிக்கும் மாண்பு அவரிடம் இருந்தது. பக்தி இருந்த இடத்தில் யுக்தி வெற்றி கொண்டது. பழங்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் படங்கள் பள்ளிக் கூடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/230&oldid=1116156" இலிருந்து மீள்விக்கப்பட்டது