பக்கம்:குப்பைமேடு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ராசீ

கலை நுட்பம் அதிகம் தெரியா விட்டாலும் இவருக் குள்ள விலையால் இவர் பேச்சு கைத்தட்டல்களைத் தட்டி கொண்டது. பாரதப் பண்பாட்டைப் பற்றி மிக அழகாகப் பேசினார். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என் பது பற்றித் திருத்தமாகக் கூறினார். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் பட்டுகோட்டைக்கு வழி என்று சொல்வது போல் அவர் பேச்சுக்கள் அமைந்திருந்தன. டி. வி. யில் இவர் படம் அடிக்கடி நிறுத்திக்காட்டப் பட்டது. செல் வாக்கு மிக்க செல்வர்கள் வரிசையில் ஒருவராகி விட்டார். பன மிருந்தால் மட்டும் போதுமா? பதவியும் வேண்டும். பதவியில் எதையும் சாதிக்கும் வல்லமையும் வேண்டும். திருமகள் அவருக்குத் திருவருள் செய்தாள்.

கார்கள் சில சமயம் மாறிக் கொண்டு இருந்தன. பெண்களுக்குப் புடவைகளில் ஏற்படும் கவர்ச்சி இவருக் குக் கார்களில் ஏற்பட்டது. மேலிடத்தில் சொல்லிப் புதுப் புது கார்களைத தமக்கு அனுப்பி வைத்து அனுபவித்து வந்தார். பழமை என்பது அவரிடம் எதுவும் கிழமை கொள்ளவில்லை. அவர் மன்னவியைத் தவிர, எல்லாம் புத்தம் புதியனவாக நித்தம் வந்து கொண்டிருந்தன.

கடைசிப் பெண். அதாவது அவள் முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் கடைசிப் பெண் ஆகிவிட்டவள். காயத்திரி பிறந்ததால்தான் தனக்குப் பதவி உயர்வு கிடைத்தது என்று சொல்லிக்கொள்கிறார். பழையபடி கட்டை வண்டி ஒட்டிக் கொண்டிருந்தால் மகளை எவனா வது ஆபீஸ் குமாஸ்தாவிற்குத்தான் தள்ள வேண்டியிருக் கும். அவன் ஆபீசில் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான் இவள் வீட்டில் கணக்கு எழுதுவதில் தவித்துக் கொண்டி ருப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/232&oldid=1116158" இலிருந்து மீள்விக்கப்பட்டது