பக்கம்:குப்பைமேடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

ராசீ

தமக்கையின் வாழ்க்கை அவளைப் பெரிதும் பாதித் தது. உள்ளதெல்லாம் தந்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கத் தன் தந்தை பட்ட பாட்டை எல்லாம் எண் னிப் பார்த்தாள். அவ்வளவு கொடுத்தும் அவளை அவர் நிம்மதியாக வைத்துக் கொள்ளவில்லை. இதைக் கொண் டுவா, அதைக் கொண்டு வா' என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்.

போகட்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாமிளி போன்று அழகிய செல்வம் பிறந்தும் அமைதியில்லை. அவளோடு கொஞ்சிப் பேசி மகிழ்ந்துகொண்டு இருக்க லாம். அவள் தத்தித்தத்திப் பேசும் தளிர் உரைகள் கண்டு தளர்ச்சி நீங்கி இருக்கலாம். என் தமக்கை கொண்டு கொடுத்த பணத்தை விட, எடுத்துக் கொடுத்த புன்னகை களை விட, அவருக்கு அழகிய செல்வத்தை, உயிரோவியத் தைப் பரிசாகத் தந்திருக்கிறாள்.

'உன்னை யார் பெண்ணைப் பெற்றுக் கொள்ளச் சொன்னது? உங்களப்பன் இலட்சங்களையா கொட்டிக் கொடுத்தான். ஒரு ஸ்கூட்டர் வாங்கவே பெரும்பாடு பட் டாகி விட்டது. இது பெரிசாகி வளர்ந்து கட்டிக் கொடுக்க எங்கே போவது பேங்கில் புகுந்து கொள்ளைதான் அடிக்க வேண்டும்' என்று பல்லவி பாடுவதைப் பலமுறை கேட்டிருக்கிறாள்.

வரதட்சணை ஒழிக! ஒழிக. என்று வானளாவக் கூறு கின்றார்கள். அது அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்பெல்லாம் எவ்வளவு தர முடியும் என்று ரொக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது எத்தனை கிலோ என்று கேட்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/234&oldid=1116161" இலிருந்து மீள்விக்கப்பட்டது