பக்கம்:குப்பைமேடு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

233

இருந்த கிலோ எல்லாம் அவர் கட்டிய வீடு விழுங்கி விட்டது. இது இனி யாரை விழுங்கப் போகிறது' என்று அந்தப் பச்சிளம் முகத்தைப் பார்த்து நச்சரித்தது இன்னும் மறக்க முடியவில்லை.

வீட்டுக்கு அழகு செல்வக் குழந்தைகள் என்பார்கள். குழந்தை பெறா விட்டாலும் மலடி என்று சொல்லி, ‘எப்படி உன்னோடு வாழ்வது?' என்று கேள்விகள் கேட் கின்றனர். மருத்துவச் சோதனைகளுக்கு அவள் பரிசோத னைப் பொருளாகிறாள். இல்லை என்றால் அந்த இடத் துக்கு மற்றொருத்தியை நியமனம் செய்கிறார்கள்.

துணிந்து பிள்ளை பெற்றாலும் தொல்லை; பெறா விட்டாலும் சள்ளை; இது இன்றைய பெண்ணின் எல்லை என்பதை அவள் எண்ணிப் பார்த்தாள்.

தன் தந்தை ஏன் இப்படி மாறினார்? காலம் கால மாகப் பெண்ணைக் கட்டிக் கொடுப்பது தந்தையின் கடமை என்ற சம்பிரதாய எதிர்பார்ப்பில் வளர்ந்திருப் பதால்தான் இந்தச் சுமைகள் பெருகி விட்டன. அவர் எனக்குக் கல்வி தந்தார். அதற்கு வேண்டிய அளவு அள்ளித் தந்தார்; உழைத்தார். அதோடு அவர் கடமை முடிந்து விட்டது. போகட்டும். ஆடம்பரத்துக்கும். அட்டகாசத் துக்கும் அடிமையாகி விட்ட இந்தச் சமுதாயத்தில் மணம் செய்து வைக்கிறார். அது கூடப் பெண் வீட்டார் தான் செய்யவேண்டும் என்ற பழக்கம் ஏன் வற்புறுத்தப் பெறு கிறது?

பதிவு செய்து கொண்டு கணவன், மனைவி என்ற ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு சில நண்பர், உறவினரை

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/235&oldid=1116163" இலிருந்து மீள்விக்கப்பட்டது