பக்கம்:குப்பைமேடு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

ராசீ

அழைத்து விருந்து தந்து அனுப்பலாம். யாரே. கச்சேரி செய்வதற்கு மண இல்லம், அரங்கு அமைத்துத் தர வேண்டியிருக்கிறது. இப்பொழுது கவலை இல்லை என்று என் தந்தை கருதுகிறார்.

புத்திசாலி ஆகி விட்டதாக ஒரு கணிப்பு: என் கண்ணி யத்தைக் காப்பாற்ற அவர் தம் நாணயத்தை இழந்தார். என் சீர்மைக்காக அவர் நேர்மை இழந்தார். அவர் நன் றாக வாங்குகிறார் என்றால் அவர் பாராட்டப்படுகிறார். அதற்கு முன் காந்தியின் சீடர்' என்று இகழப் பட்டார். இன்று ஊழல் மன்னன்' என்று பாராட்டப் படுகிறார். என் தந்தை இந்த மாற்றத்தைச் செய்து கொண்டு வரா விட்டால் இந்தப் பெருமைகள் இந்த வீட்டுக்கு வந்துசேர்ந் திருக்காது. என் தமக்கை மற்றொரு குழந்தைக்குத் தாயாக ஆகித் தலை நிமிர்ந்து இருக்க முடியாது. வீட் டுக்கு வரப் போக வேண்டியவர்கள் பாட்டுக்குத் தாளம் போடுபவர்களாக மாறி மாறி வந்து குவிகிறார்கள். வீடு களை தட்டி இருக்கிறது. தோட்டத்தில் புல் பசுமையைக் காட்டுகிறது.

எல்லோருக்கும் இந்த வாய்ப்பு எங்கே கிடைக்கப் போகிறது? ஒரு சாவித்திரிக்கு காயத்திரிக்குத் தான் கிடைக்கும். நாங்கள் பெண்களாகப் பிறந்து விட்டோம். அதுவும் அதிர்ஷ்டந்தான். பையன் பிறந்திருந்தால் என் அப்பா இவ்வளவு தாராளமாக இருந்திருக்க முடியாது.

கார்த்திக் முன்பெல்லாம் அரை குறை காதல் செய்து வந்தான். "ஹலோ!' என்பான். சிரிப்பான். இப்பொழுது "அது இது' என்று கேட்குமளவிற்கு வந்து விட்டான்.

"பொறுமை வேண்டும் என்று அடக்கி வைக்க வேண்டியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/236&oldid=1116164" இலிருந்து மீள்விக்கப்பட்டது