பக்கம்:குப்பைமேடு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

235

'மூன்று முடிச்சு' போட்டு விட்டால் என் சேலை முடிச்சைத் தொடலாம் என்று சொல்லியிருக்கிறேன். பாவம் துடிக்கிறான். என்ன செய்வது? சடங்குகள், சம் பிரதாயங்கள் இவற்றை எப்படி மீற முடியும்? எனக்கு என்ற ஒரு கட்டுப்பாடு வீட்டிலும் ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பிலும் ஏற்பட்டது. தேசியப்படைப் பயிற்சியிலும் ஏற்பட்டது. அந்த மன ஒழுங்கு என்னைத் தடுத்து நிறுத்துகிறது' என்று பட்டியலிட்டு எண்ணிப் பார்த்தாள்.

எந்த வசதிகள் வாய்ப்புகள் தனக்குச் சாதிகமாக இருந்தனவோ அவை பாதகமாகும் சூழ்நிலையை அவன் சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

செல்வமும் அந்தஸ்தும் வாய்ந்த அவள் தந்தை ஒரு பி.ஈ பட்டதாரிச்குக் கொடுப்பது தன் நிலைக்கு ஏற்ற தல்ல என்ற புதிய நினைவோட்டம் அவருக்குக் குறுக்கே நின்றது.

'இந்த இன்ஜினியர் பையன் தேவை இல்லை; மதுரை யில் மில் முதலாளி மகன் ஒருவன் இருக்கிறான். அவர் களுக்கு நம் தயவுகள் தேவைப்படுகின்றன. அவனை உனக்குப் பேசி முடிவு செய்கிறேன்' என்று புதிய பேச்சைத் தொடக்கி வைத்தார்.

காதலை அவள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை; இளைய சமுதாயம் காதலில் அசையாத நம்பிக்கை கொண்டு இருப்பது அவளுக்குப் பக்கத் துணையாக இருந் தது. அவர்கள் கற்கும் கவிதையும் பார்க்கும் படங்களும் இந்தச் கலர் சாரத்தைத் தானே போதித்துச் கொண்டிருக் கின்றன. எதை விட்டுக் கொடுத்தாலும் காதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/237&oldid=1116165" இலிருந்து மீள்விக்கப்பட்டது