பக்கம்:குப்பைமேடு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

ராசீ

விட்டுச் கொடுக்க முடியாது. சரியோ தவறோ ஒருவனுக்கு என்று தன்னை அர்ப்பணித்து விட்ட பிறகு வாபஸ் வாங்குவது பெண்மைக்கு இழுக்கு என்பதை அறித்தவளா கச் செயல் பட்டாள்.

'ஒப்புக் கொள்கிறேன்; உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் மத்திய நிலையில் இருக்கும் சாதாரண ஒருவனுக்கு வாழ்க்கைப் படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர் கள். அது நியாயந்தான்; ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு வளர்ந்த காதல் நான் சமநிலையில் இருந்த போது ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

ஒர் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு பின் வாங்கு வது சட்டப்படி குற்றம்தான். ஒப்பந்தச் சட்டப்படி அது செல்லாது தம் தகுதிக்கும் அது தகாது; அதனால் என் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது, என்றாள் காயத்திரி.

'என் சல்லி காசு கூட அவனுக்குத் தர முடியாது. அவனைக் கேட்டுப்பார்; என்னைச் சார்ந்து நீங்கள் வாழக் கூடாது; உங்கள் உழைப்பில் நீங்கள் வாழ முடியமா அவனைக் கேட்டுப்பார்' என்று தன் முடிவைக் கூறினார்.

எண்ணிப் பார்த்தாள்; அவன் இதற்கு ஒப்புச் கொள் வானா! அவனைக் கேட்காமல் ஒரு முடிவும் கொள்ள முடியாது. என்றாலும் தன் கருத்தைத் துணிந்து கூறி னாள் .

"என்னைப் பொருத்த வரை உங்கள் சார்பு எனக்குத் தேவை இல்லை நீங்கள் செய்யும் ஆடம்பரச் செலவுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/238&oldid=1116166" இலிருந்து மீள்விக்கப்பட்டது