பக்கம்:குப்பைமேடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

ராசீ

டுப் பார்த்துத்தான் வாங்குவார்கள். அந்த அளவுக்குப் போகாமல் மூக்கை மட்டும் தொட்டுப் பார்ப்பதில் தவறு இல்லை என்று கூறினாள். அந்த ரசிகனைப்பார்க்க வேண் டும் என்று துடித்தாள்.

அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தாள்; அப்பா எனக்கு அந்தப் பையன் தான் வேண்டும்" என்று அடம் பிடித்தாள்; ரசிகனுக்கு அவள் அடிமையாக ஆவது முடியவில்லை. முக்கு அவளைக் கைவிட்டு விட்டது. அவள் அப்பாவுக்கு வேறு வழி இல்லை லட்சம் கொடுத்தாகிலும் லட்சண மாக இந்தப் பையனுக்கே தந்து விடலாம் என்று முடிவு செய்தார்.

தன் மாமன் மகள் இவளைக் குடமிளகாய்' என்று கிண்டல் செய்தாள்.

இவள் சிரித்துக் கொண்டாள்.

“என்னடி உன் காதலன் லட்சத்தில் நிற்கிறானாமே' என்று கிண்டல் செய்தாள்.

'நாம் கலியாணச் சந்தையில் பகடைக் காய்கள்' என்றாள் காயத்திரி.

'நீ என்னதான் முடிவு எடுக்கிறாய்?'

'எனக் குக் தெரியவில்லை. கலியாணம் பண்ணிக் கொள்ளமல் இருக்க முடியாது. இனி அப்பாவுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை" என்றாள்.

யார் இவர்கள் பேச்சைக் கேட்கக் காத்துக் கொண்டி ருக்கிறார்கள். நாளும் கோளும் கூடி வந்து விட்டது. யார் வந்து நிறுத்தினாலும் தடுத்து நிறுத்த முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/244&oldid=1116172" இலிருந்து மீள்விக்கப்பட்டது