பக்கம்:குப்பைமேடு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

243

மூத்த மருமகன் விழித்துக் கொண்டான். திரித்த வரை கயிறு" என்பது அவன் உச்சரிக்கும் பழ மொழி. பிறகு தனக்கும் ஒரு லட்சம் தேவை. மேல் மாடம் கட்டியதில் ஏற் பட்ட கடனுக்கு என்று விண்ணப்பம் போட்டு வைத்தான்.

வீட்டில் நிச்சயம் செய்யும் நாள் அது. சுற்றத்தவர் வந்து கூடினர். பணம் லட்சங்கள் பரிமாறிக் கொள்ளும் பொருட்டுப் பந்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

பெண் அலங்கரிக்கப்பட்டாள். மின்னல் நடக்கை போல் அவள் பின்னல் அழகோடு காட்சி அளித்தாள் கையில் வீணை தரப்பட்டது; அவளுக்கு நாணவும் தெரியும். அந்த நாணத்தைக் காட்ட ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எனக்கும் ஒரு மனநிறைவு ஏற்பட்டது. அவருக்கு இருப்பது இரண்டு பெண்கள். இவர்கள் தானே வாரிசுகள். சொத்து எங்கே போகிறது. கிடக்கட்டும் என்று கலந்து கொண்டேன்.

காயத்திரி பாடினாள்; அந்தப் பாட்டில் கம்பீரம் தொனித்தது; போர்ப் பரணியாக அந்தக் சங்கீதம் கேட் டது. மங்கல நாளில் இந்தப் போர் ஒலி ஏன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

டாக்டரின் மகள் சில விருந்தினரோடு உள் நுழைந் தாள். அவர்கள் காக்கிச் சட்டை அணிந்திருந்தார்கள். காயத்திரி என் மகனைப் பார்த்தாள் எடுத்துக் கொள்' என்றாள்.

அக்காவின் கணவரைப் பார்த்தாள்; எடுத்துக் கொள் ளுங்கள்' என்றாள்; இருவரும் கரம் நீட்டினர். காந்தியின் சீடரின் கரங்களில் வந்த விருந்தினர் பாராட்டிக் கேடயம் மாட்டினர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/245&oldid=1116173" இலிருந்து மீள்விக்கப்பட்டது