பக்கம்:குப்பைமேடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு 29 முதியோர் பாதுகாப்பு, நன்கொடை கேட்காத பள்ளிச் சாலைகள், சத்துணவுக் கூடங்கள், எதிர்பாராத இழப்பு களுக்கு ஈடு செய்ய உதவித் தொகை தருதல், நலிந்த குடும்பங்களை நிமிரவைத்தல், வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பித்தர இயலாத வறியவர்க்கு வாழ்வு அளித்தல். இத்தகைய அறச் சாலைகளை நிறுவுதல் இப்படி மாற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அறிவொளி இயக் கங்கள் நாட்டிதல் பெருகிவருவது பாராட்டத் தக்கது என் கிறாள். பெண்கள் விடுதலை இயக்கம் வளர்கிறது. அவர்கள் தம்மை விடுவித்துக் கொண்டால் மட்டும்போதாது "நாட்டை இப்பழமையிலிருந்து மீட்க வேண்டும் என்று அவள் துடிக்க, அவள் சார்பு என்னையும் மாற்றத் தொடங்கிவிட்டது. ஒரு ஆடவனின் வெற்றிக்கு ஒரு பெண் துணை நிற்பாள், என்று கூறுவார்கள்; என்னைப் பொறுத்தவரை அவள் என்னை நெறிப்படுத்தக் காரண மாக நிற்கிறாள். என்னை என்பழைய போக்கிலிருந்து மாற்ற அவள் வாதங்கள் துணை நிற்கின்றன. எழுத்தில் மதப்பிரச்சாரம் கூடாது என்கிறாள் அவள் 'பழைய இலக்கியங்களில் அவை கலந்து விட்டன. அவை நீக்க முடியாது' என்பது என்வாதம். ஆபாச எழுத்துக்கள் எப்படி இளைஞர்களைக் கெடுக்கிறதோ அதே போல மதவியல் மாந்தர் தம் மடமையைக் கூட்டுகிறது என்பது அவள் வாதம். தெய்வ நம்பிக்கை வேண்டும் என்று வற்புறுத்தும் எழுத்துக்கள் மனிதனின் தன்னம்பிக்கையைக் கெடுக்கின் றன. 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்று பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/31&oldid=806304" இலிருந்து மீள்விக்கப்பட்டது